காஞ்சிபுரம் மாவட்டம்
அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நாளை மறுநாள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை என்று நினைக்கிறேன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருக்கின்ற மேற்பார்வையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் கடைகள் பெரியதாக இருக்கின்ற இடங்களில் மற்றும் பார் வசதிகள் இருக்கின்ற இடங்களில் ஒரு விதத்தில் அரசு கொண்டு வந்திருக்கின்ற ஸ்டிக்கர் ஒட்டுவது காலி மதுபான பாட்டில்கள் வாங்குவது என்பது ஏதுவாக இருந்தாலும் சிறிய கடைகளுக்கு இது பொருந்தாது என்பது உண்மை எந்த கடைகள் எப்படி இருந்தாலும் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உதவி விற்பனையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிர்வாகத்திடம் தயவு செய்து நீங்கள் எங்களுக்கு தேவையான ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஒரு நபரையும் காலி மதுபான பாட்டில்களை வாங்குவதற்கு ஒரு நபரையும் நியமிக்க வேண்டும் என்று நிர்வாகத்திலும் நீங்கள் ஒட்டுமொத்தமாக சென்று முறையிடுங்கள் இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்த இரண்டு வேலைகளை செய்வதற்கு இரண்டு ஆட்களையும் அதற்கு போதுமான இடத்தையும் நிர்வாகமும் நிர்வாக அதிகாரிகள் ஆகிய நீங்கள் எங்களுக்கு உருவாக்கி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி உங்களால் முடிந்ததை செய்யுங்கள் இல்லையென்றால் நாம் அனைவரும் அடிமை அடிமைகள் தான் என்பதைய மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் வசதிகளோ இல்லாத கடையில் எப்படி பணிபுரிவது என்பது அதில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு தற்போது இருந்தே மன உளைச்சலை உருவாக்கும் சூழ்நிலை மனதிற்குள் உருவாகி இருக்கும் என்பது உண்மை நான் என்ன சொல்லுகின்றேன் என்றால் அரசு நமக்கு ஒரு ஊதியமாக மேற்பார்வையாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயும் விற்பனையாளர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாயும் என்று சம்பளத்தை நிர்ணயித்து விட்டு ஒவ்வொரு கடைகளையும் பெரிதாக்கி எல்லா வசதிகளையும் வைத்து அரசு கொண்டுவர வேண்டும் இது ஒரு விதத்தில் நல்லதாக தெரியும் நல்லதாகவே இருக்கும் என்பதும் என்னுடைய கருத்து அந்தக் கட்டுமான வசதியில் முதலில் பாத்ரூம் வசதிகளை வைத்து தருவது அரசு மற்றும் நிர்வாகத்தினுடைய முக்கிய பொறுப்பு என்பது நான் தெரிவித்துக் கொள்கிறேன்