நாமக்கல் மாவட்டம் டாஸ்மாக் 13-1-2026
அனைத்து டாஸ்மாக் தொழிலாளர் தோழர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
*****************************
இந்த காலி பாட்டில் திரும்பபெரும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கும் மாற்று வழியில் செயல்படுத்துவதற்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு வகையில் பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள்
ஒரு சில மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள்
இதனால் ஊழியர்கள் பெரும் துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் கூடுதல் பணி சுமையால்
சொல்லில் அடங்கா துயரம் அனுபவித்து வருகிறார்கள்
இந்த துயரங்களை எல்லாம் போகின்ற வகையில்
நாமக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கடந்த 29 12 2025 அன்று நாமக்கல் பூங்கா சாலையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினோம்
அந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் முழுவதிலிருந்து அனைத்து தோழர்களும் பெருந்திரளாக
கலந்து கொண்டார்கள்
இந்தப் போராட்டத்தை கவனித்த டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் உடனடியாக
02.01.2026 அன்று காலை 10 மணி அளவில் மேற்பார்வையாளருக்கான
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள கண்ணன் ஹோட்டல் அரங்கில்
அவசரமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி அனைத்து கடைகளிலும் காலி பாட்டில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர் மற்றும் பதிவேடுகளை அனுப்பி வைத்தார்கள். பின்னால் வரும் துன்பத்தை அறியாத அனைவரும்
காலி பாட்டில் திரும்பபெறும் திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினோம்
ஆனால் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகளும்
உடல்நல பாதிப்புகளும்
தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு
அதனால் பாதிப்புக்குள்ளான நமது தொழிலாளர்கள் உடனடியாக திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்திட வேண்டும் என
05 .01. 2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்
நமது கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை
பின்னிட்டு 07.01.2026 அன்று திருச்செங்கோடு சாலையில் உள்ள கண்ணன் ஓட்டல் அரங்கில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்று கூடி 13 1 2026 அன்று மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
காலி பாட்டிலில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மற்றும் பதிவேடுகளை திரும்ப ஒப்படைப்பது என முடிவு எடுத்து
அதன்படி13.01.2026
அன்று காலை 10 மணி அளவில் மழை பெய்தாலும் யாரும்
பின் வாங்காமல் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஒன்று கூடி நமது கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம் .
நம்முடைய கோரிக்கை நிறைவேறும் வரை கடையை திறக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரக்கச் சொன்னோம்.
நம்முடைய இந்த ஆர்ப்பாட்டத்தை அறிந்த முதுநிலை மண்டல மேலாளர் அவர்கள் உடனடியாக
நாமக்கல் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்
பிறகு மாவட்ட மேலாளர் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் அவர்கள் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில்
நமது போராட்டத்தை தொடர்ந்தோம்.
ஐந்து கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்
பத்து நாள் அவகாசம் கேட்டு முதுநிலை மண்டல மேலாளர் அவர்கள் நமது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்கள்.
அதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவுபடி நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வருகை புரிந்து நம்முடைய போராட்டத்தின் தன்மையை முதுநிலை மண்டால் மேலாளர் அவர்களிடத்தில் கேட்டு அறிந்தார்.
அதற்குள்ளாக காவல்துறை அதிரடி படையும் விரைந்து வந்துவிட்டது.
இந்த பதட்டமான சூழ்நிலையில் நமது தோழர் ஒருவர் மண்ணெண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை வேறு மாதிரி நடத்த ஆயத்தமான சூழ்நிலையில் காவல்துறை தடுத்து அந்த நபரை காப்பாற்றினார்கள்.
இதையெல்லாம் நாம் கருத்தில் கொண்டு
முதுநிலை மண்டல மேலாளர்கள் அவர்களின் வேண்டுகோளின் படியும் 10 நாள் அவகாசம் தந்தது
நாமும் அதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக
நிறுத்தி வைத்தோம்.
எதிர்வரும் 23 1 2026 அன்று உயர் நீதிமன்றத்தில் நம்முடைய வழக்கு விசாரணைக்கு வருகிறது
அன்று நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையை எதிர்நோக்கி உள்ளோம்.
எனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
உயர் நீதிமன்ற உத்தரவு வரும்வரை நமக்கு சாதகமாக தீர்ப்பு வராமல்
எதிராக வந்தால் இருட்டு எதிராக மேல்முறையீடு செய்து
நமது போராட்டத்தை தீவிரப்படுத்தி நமது கோரிக்கையை வென்றெடுப்போம்
தமிழ்நாட்டிலே நாமக்கல் மாவட்டம் சட்டத்திற்கு உட்பட்டு போராட்டத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம் என்பதை அனைவரும் அறிவார்கள்.
எனவே
போராடுவோம்
வெற்றி பெறுவோம்
நன்றி
இவண்
நாமக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிலாளர்கள்.